1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்..!

1

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க கூடியது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் குரலை ஒடுக்கும். இதை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில் தான், லோக்சபாவில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார். அப்போது மசோதா அறிமுகத்தின் போதே, இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி செய்தனர்.

திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிகள் மசோதாவை வரவேற்றன. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துவிட முடியுமா என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கேள்வி எழுப்பினார்.

மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சமாஜ்வாதி எம்பி தர்மேந்திர யாதவ் எதிப்பு தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகத்துக்கு திமுக எம்பி டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கிறோம். கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறோம். மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று டி ஆர் பாலு கூறினார். இதையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்தார். பிரதமர் மோடியும் இதற்கு விருப்பம் தெரிவித்ததாக அமித்ஷா கூறினார்.

 

மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது. முன்னதாக மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்பதால், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜக அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தது.

Trending News

Latest News

You May Like