1. Home
  2. தமிழ்நாடு

மேலும் ஒருவர் உயிரிழப்பு..!கள்ளக்குறிச்சி பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு..!

Q

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று வரை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (ஜூன் 26) காலை கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62), ஏசுதாஸ் என்ற இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இன்று மதியம் 1 மணி நிலவரப்படி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி 62 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மேலும் ஒருவர் உயிழந்துள்ளார் இதனால் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது 
தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சியில் 91, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 9 பேர், ராயபேட்டை அரசு மருத்துவமனையில் 1 என மொத்தம் 135 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like