வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் உயிரிழப்பு..!
கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 47) என்பவர் வெள்ளிங்கிரி முதல் மலையில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பாதிப்பு, மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்பு இருப்பவர்கள் மலையேற வரவேண்டாம் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது உயிரிழப்பு ஏற்படும் நிலையில் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்சகோரிக்கை வைத்துள்ளனர்.