1. Home
  2. தமிழ்நாடு

கள்ளச்சாராயம் விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது..!

1

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சோ்ந்த 132 போ் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 21 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். வியாழக்கிழமை மேலும் 19 போ் இறந்தனா். இந்த நிலையில், சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 18 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 52-ஆக உயா்ந்தது. மேலும், 114 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், 52 பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை சிபிசிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் புதுச்சேரியில் இருந்து சாராய உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களை வாங்கி வந்து வினியோகம் செய்துள்ளார். சிபிசிஐடி போலீசாரிடம் ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ் உள்பட 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,மேலும் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்வரை கைது செய்துள்ளசிபிசிஐடி போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

Trending News

Latest News

You May Like