விவசாயிகள் - மீனவர்களுக்கு ஒரு லட்சம் கோடி! பிரதமர் மோடி அறிவிப்பு!

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, இன்று மட்டும் 4 இடங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால், மோடி மிகவும் உற்சாகம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் முழங்கிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த தேசத்தை முன்னேறப்பாதையில் கொண்டு செல்லும். வளர்ச்சியை நோக்கிச் செல்லும். ஆனால், நீங்கள் மற்றவர்களுக்கு வாக்களித்தால் அது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே செல்லும்.
இங்கு நான் இந்த கூட்டத்தை காணும்போது வரும் நவம்பர் 10-ந் தேதி முடிவு தற்போதே தெரிந்துவிட்டதாக கருதுகிறேன்.
காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் மட்டுமே செய்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது ஒரு சில குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி அனைவருக்கும் வாய்ப்பு சம வாய்ப்பு வழங்குகிறது. காரணம் இது மக்களுக்கான கட்சி மட்டுமல்ல மக்களுக்கான ஆட்சியும் இங்கு தான் நடக்கிறது.
எனவே, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் கருதி மத்திய அரசு ஒரு லட்சம் கோடி நிதி உதவியை மத்திய அரசு வழங்கும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.