1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஓணம் : மகாபலி சக்கரவர்த்தி வாமன அவதார புராண கதை தெரியுமா?

1

ஓணம் பண்டிகை சிங்கம் மாசம் என அழைக்கப்படக்கூடிய, சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் கொண்டாடப்படக்கூடிய மிக சிறப்பான பண்டிகை ஆகும்.

கேரளம் மற்றும் கேரளாவை எல்லைகளாகக் கொண்ட தமிழகத்தின் சில பகுதிகளிலும் இந்த பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முக்கியத்துவமே மகாபலி சக்கரவர்த்தி எனும் அரசன் ஒவ்வொரு ஆண்டும் மக்களை பார்க்க வருவதாக நம்பப்படுகிறது.

அரக்கனாக இருந்தாலும் மக்கள் விரும்பும் அரசனாக பல தான தர்மங்களைச் செய்து, தேவர்களின் அளவிற்கு உயர நினைத்தவர் மகாபலி சக்கரவர்த்தி. அதோடு அண்ட சராசரத்தையும் ஆள நினைத்தார். அவரின் செருக்கினை அடக்கிட மகாவிஷ்ணு வாம அவதாரம் எடுத்து, மகாபலி இடம் 3 அடி மண் கேட்டார்.

வந்திருப்பது சாதாரண முனிவர் அல்ல என உணர்ந்தோம் சரி என சம்மதித்தார். உடனே வாமன அவதாரம் ஆக இருந்த அந்த சிறு முனிவன் விஸ்வரூபம் எடுத்து விண்ணை ஒரு அடியாலும், மண்ணை ஒரு அடியாலும் அளந்தார். பின்னர் மூன்றாவது அடி எங்கு வைப்பது என மகாபலி இடம் கேட்க அவர் தன் தலையை காண்பித்து என் தலை மீது வைக்கவும் என வேண்டினார்.

அற்புத உள்ளத்தை உணர்ந்து மாமனாக வந்த மகாவிஷ்ணு உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அப்போது எனக்கு இந்த மக்களை விட்டு பிரிந்து செல்ல மனமில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டும் நான் இங்கு வந்து மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதை பார்த்து நானும் மகிழ வேண்டும் என்பது எனது ஆசை. அதை நிறைவேற்றுங்கள் எனக் கூறினார். அப்படி ஆகட்டும் என மகா விஷ்ணு கூறினார்.
அப்போது முதல் சிரஞ்சீவியாகத் திகழக்கூடிய மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் மக்களை பார்க்க வருவதாக ஐதீகம்.

பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படக்கூடிய இந்த ஓணம் பண்டிகை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்ச்சிகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த பத்து நாட்களிலும் அதிகாலையில் மக்கள் எழுந்து குளித்து சுத்தமாக, பெண்கள் கசவு எனக்கூடிய வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கமாக உள்ளது.

முதல் மூன்று நட்சத்திரத்தின் போது மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
நான்காவது நட்சத்திரத்தில் ஒன்பது வகை உணவுகளை தயார் செய்து சுவைக்கின்றனர்.
ஐந்தாம் நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் அனிளம் எனப்படக்கூடிய பாரம்பரிய படகு போட்டி நடத்தப்படுகிறது.
10ம் நாளாக வரக்கூடிய திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அத்தப்பூ கோலம் :
அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கக்கூடிய இந்த ஓணம் பண்டிகை அத்தப் பூக்களால் கோலம் இட்டு தொடங்குவது வழக்கமாக உள்ளது. ஓணம் பண்டிகையின் ஒவ்வொரு நாளும் அத்தப்பூ கோலம் இட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பது வழக்கமாக உள்ளது.

Trending News

Latest News

You May Like