ஒரு புறம் பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கிக் கொண்டு மறு பக்கம் ஊட்டச்சத்தை பற்றி பேசுகிறது - அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி வரும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை, ஒழுங்காகப் பயன்படுத்தினாலே போதுமானது. புதியதாகப் பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த போஷான் அபியான் திட்டம் மூலம், கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிதி, ₹2936 கோடி ரூபாய். சராசரியாக வருடத்திற்கு ஐம்பது லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைகிறார்கள். ஒரு புறம், பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை உட்பட தரமற்ற உணவு வழங்கிக் கொண்டு, மற்றொரு புறம், அலங்கார வார்த்தைகளால் மக்களை ஏமாற்றுவதை எப்போது நிறுத்தும் திமுக? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற ஒரு திட்டம் கொண்டு வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
— K.Annamalai (@annamalai_k) August 13, 2023
குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தை உறுதி செய்ய வேண்டுமானால், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் ஏற்கனவே கடந்த ஏழு ஆண்டுகளாகச் செயல்படுத்தி… https://t.co/wlikIbLpFn