266-ஆவது குருபூஜையை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படும்..!

அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 266-ஆவது குருபூஜையை முன்னிட்டு 11.07.2023 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களுடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.