1. Home
  2. தமிழ்நாடு

அன்று டச்சுக்காரன் முருகனை திருடினான் இன்று இந்து சமய அறநிலையத் துறை..!

1

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய என் மண் என் மக்கள் பயணம், சங்க கால இலக்கியங்களிலும் புராணங்களிலும் இடம்பெற்ற , அசுரர் குடி கெடுத்த ஐயன் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் நகரத்தில் பெரும் மக்கள் திரள் நடுவே இனிதே நடந்தேறியது. “நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்” என்று தொல்காப்பியத்தில் புகழப்பட்ட முருகப்பெருமானின் பராக்கிரமம் நிறைந்த ஊர். ஆதிசங்கரருக்கு அருளிய புண்ணிய பூமி.

1646ஆம் ஆண்டு காலகட்டத்தில், திருச்செந்தூர் முருகன் கோவிலை டச்சு படைகளிடம் இருந்து காப்பாற்ற திருச்செந்தூர் மக்கள் ஒன்றுகூடி டச்சு படையை எதிர்கொண்ட வீரவரலாறு கொண்ட ஊர் இந்த திருச்செந்தூர். அன்று டச்சுக்காரன் முருகனை திருடினான் இன்று இந்து சமய அறநிலையத் துறை, முருகரை தவிர மற்ற அனைத்தையும் திருடுகிறது. நம் கோவிலில் நடக்கும் அத்துமீறல்களை நாம் தட்டி கேட்கவேண்டாமா? நம்மை காக்கும் முருகனின் சொத்தை காப்பது நமது கடமை இல்லையா? 

Image

புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகின்றன. பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடவுளுக்கு வேண்டி, பசுமாட்டை தானம் கொடுப்பார்கள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையின்படி, அப்படி தானமாகப் பெற்ற 5,309 பசு மாடுகளை காணவில்லை. மாடுகளைத் திருடி விற்றுவிட்டார்களா? கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள், கோவில் சம்மந்தப்பட்ட பொருட்கள் மட்டும் 50,000க்கும் மேல் இருக்கும் என 1989-ல் 'யுனெஸ்கோ' கூறியுள்ளது. 

கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சிலைகளை நமது பாரத பிரதமர் மீட்டுக் கொண்டுவந்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் வெற்றிலைக்கு, இந்த வருடம் ஏப்ரல் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது திருச்செந்தூருக்குக் கிடைத்த பெருமை. 

தமிழகத்தில் ஏழு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மொத்த முத்ரா கடனுதவி 2,02,603.94 கோடி ரூபாய். இதன் மூலம் பலனடைந்தவர்களில் ஒருவரான திருமதி ஆனந்தவள்ளி, வருடம் 6000 ரூபாய் பெறும் விவசாயிகளில் ஒருவரான திரு மந்திரவேல், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு பெற்ற  திரு பரமசிவம், சுவாநிதி திட்டத்தில் பலனடைந்துள்ள திருமதி தீபா,  பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற கருப்பட்டி வியாபாரம் செய்யும் திருமதி அற்புதமணி. இவர்கள்தான் பிரதமர் மோடியின் முகவரி.

Trending News

Latest News

You May Like