1. Home
  2. தமிழ்நாடு

கார்கில் வெற்றி தினத்தில் தேசத்தை காத்த வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றுவோம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..!

1

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள  கார்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்ட  நிலையில்,  கார்கிலைப் பாதுகாக்க இந்திய ராணுவ வீரர்கள் 30,000 பேர் எதிர்த்து போரிட்டனர்.  சுமார் இரண்டரை மாதங்கள்  தீரத்துடன் பாகிஸ்தானை எதிர்த்து போரிட்ட நிலையில் , ஜூலை 26, 1999 ல்  இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.  

 இந்த போரில்  வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ,  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி  கார்கில் விஜய் திவாஸ் தினம்  கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு  கார்கில் போர் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இதனையொட்டி நாடு முழுவதும் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார்கில் போர் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “25வது கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தை காத்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.    


 

Trending News

Latest News

You May Like