1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம் - கனிமொழி..!

1

சென்னை:அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் – பண்பாட்டின் குறியீடு – உரிமைப்போரின் முன்னோடி – தமிழ்நாட்டின் அடையாளம் – திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி – சுயமரியாதை – மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.”இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like