நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை வடபழனி, பெருங்குளத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் இயங்காது

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் 10,975 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை முடிவடைந்து பணிகள் பணிக்கு திரும்புவதற்கு ஏதுவாக நவ.13 ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது. இது போக, இந்தாண்டு ஆம்னி பேருந்து கட்டணமும் 30% வரை குறைக்க ஆணையிட்டுள்ளது. மேலும், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பயணிகள் சொந்த ஊருக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.
அதிலும், குறிப்பாக நாளை முதல் சிறப்பு பேருந்துகளும் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை வடபழனி, பெருங்குளத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும், பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.