ஜனவரி 1 முதல் உயருகிறது ஆம்னி பஸ், ஓலா, உபர் கட்டணம்!!
ஆன்லைன் முன்பதிவு பயணக் கட்டணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவுள்ளதால், ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் பயணக் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய அரசு சில அதிரடி மாற்றங்களை அண்மையில் மேற்கொண்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
இவற்றில் முக்கியமாக ஆன்லைன் வாயிலாக முன்புதிவு செய்யப்படும் அனைத்து விதமான பயண டிக்கெட்களுக்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
அதாவது இதுநாள்வரை, முதல்வகுப்பு மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள், ஏசி பேருந்துகளுக்கான பயணக் கட்டணத்துடன் மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏசி வசதியில்லாத சாதாரண ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் கார் மற்றும் ஆட்டோக்களில் முன்பதிவு முறையில் பெறப்படும் அனைத்து பயணக் கட்டணங்கள் மீதும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.
இதன் விளைவாக ஆம்னி பேருந்துகள், ஓலா, ஊபர் டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது.இனி பயணக் கட்டணத்துக்கேற்ப அதனுடன் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.
இதேபோன்று மருத்துவமனை, திருமண விழாக்கள் போன்றவற்றுக்கு செல்ல தனிநபர் குறிப்பாக மூத்த குடிமக்கள ஊபர், ஓலா டாக்சி மற்றும் ஆட்டோ போக்குவரத்தையே சார்ந்துள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க, அனைத்து முன்பதிவு பயண டிக்கெட்டுகள் மீதும் 5% ஜிஎஸ்டி என்ற மத்திய அரசின் முடிவால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
newstm.in