1. Home
  2. தமிழ்நாடு

ஒமைக்ரான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

ஒமைக்ரான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!


ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஒமைக்ரான் வகை கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஒமைக்ரான் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
அதேபோல், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like