1. Home
  2. தமிழ்நாடு

ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகம் வருகிறது மத்தியக் குழு!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகம் வருகிறது மத்தியக் குழு!!


இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில்,தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.

இந்தியாவில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்துவருகிறது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 38, கேரளா 37, தமிழ்நாட்டில் 34 மற்றும் கர்நாடகாவில் 31 தொற்று பதிவாகியுள்ளன.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகம் வருகிறது மத்தியக் குழு!!

கொரோனா பரவல் காரணமாக, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல், தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகம் வருகிறது மத்தியக் குழு!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்று ஓமைக்ரான் தொற்றை முதலில் கண்டறிந்தவரும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக உள்ளவருமான ஏஞ்சலிக் கோட்ஸி (angelique coetzee) கூறியுள்ளார். எனினும் பாதிப்பு குறைந்த அளவில்தான் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like