1. Home
  2. தமிழ்நாடு

ஒமைக்ரான் அச்சுறுத்தல் : வருகிறது இன்னொரு டோஸ் தடுப்பூசி!!

ஒமைக்ரான் அச்சுறுத்தல் : வருகிறது இன்னொரு டோஸ் தடுப்பூசி!!


ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ள நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து முடிவெடுக்கக்கோரி, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன.

அதே போல் இந்திய மரபணு விஞ்ஞானிகளும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்புடைய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முன்னுரிமை அளித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் : வருகிறது இன்னொரு டோஸ் தடுப்பூசி!!

தற்போதைய தடுப்பூசிகளில் வைரஸுடன் போராடும் ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் இருக்கும் என்றும் அவை ஒமைக்ரானின் ஆபத்தை குறைத்தாலும், அவற்றை எதிர்க்க போதுமானதாக இருக்காது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இதற்கிடையே, கோவிஷீல்டு தடுப்பூசியின், பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பூஸ்டர் டோஸ் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like