அதிர்ச்சி..!! இந்தியாவில் உச்சம் தொட்டது ஒமைக்ரான்..!
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் தாக்குதல் நடத்தி வருகின்றன. பிரான்சில் தொடர்ந்து 2 நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 961 ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு இன்று 1,270ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.