1. Home
  2. தமிழ்நாடு

தெலுங்கானாவிலும் நுழைந்தது ஒமைக்ரான்.. 7 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு உறுதி..!

தெலுங்கானாவிலும் நுழைந்தது ஒமைக்ரான்.. 7 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு உறுதி..!


இந்தியாவில் கடந்த 2-ம் தேதி ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அன்றைய தினம், கர்நாடக மாநிலத்தில் 66 வயதான தென் ஆப்பிரிக்கர், 46 வயது பெங்களூரு டாக்டர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டில்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார் என மொத்தம் 8 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்த வைரஸ் நுழைந்திருக்கிறது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், குஜராத், ராஜஸ்தான், டில்லி, மகாராஷ்டிரா, சண்டிகர் மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒமைக்ரான் கால் பதித்துள்ளது. மாநிலத்தில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்யாவைச் சேர்ந்த 24 வயது பெண்மணி ஹைதராபாத்துக்கு வந்தார். இதேபோல, சோமாலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். இந்த இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் வந்த 7 வயது சிறுமிக்கும் ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.

Trending News

Latest News

You May Like