1. Home
  2. தமிழ்நாடு

உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்றார்!

1

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்கேஐசிசி) முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

சகினா இடூ, ஜாவீத் ராணா, சுரிந்தர் சவுத்ரி, ஜாவீத் தார் மற்றும் சதீஷ் சர்மா ஆகிய அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like