1. Home
  2. தமிழ்நாடு

ஓம் பிர்லா அபார வெற்றி..!

Q

48 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகர் தேர்தல் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா 307 எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட கே.சுரேஷுக்கு 228 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. பெரும்பான்மைக்கு மொத்தம் 272 இடங்களில் தேவை என்ற சூழலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வானார்.

Trending News

Latest News

You May Like