பழைய குற்றாலம் அருவி முழுமையாக வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது!
பழைய குற்றாலம் அருவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அனைவரும் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். இதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தான். இதனைத்தொடர்ந்து அப்போதே இந்த பழைய குற்றாலம் அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக ஆலோசித்து தான் வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த பழைய குற்றாலம் அருவியானது முழுமையாக வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் சோதனைச்சாவடியானது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.