1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ.1200 ஆக உயர்வு – எப்போது கிடைக்கும்?

1

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான மாத ஓய்வூதிய தொகை ரூ.1000ல் இருந்து ரூ. 1200ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

அதில் தமிழகம் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அதன் படி முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1000ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய தொகை ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாக அரசாணை வெளியாகி இருக்கிறது.

மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் ஓய்வூதியதாரர்கள் அதற்கான பரிந்துரைகளை அனுப்பும்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like