1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் சென்னையில் ஓலா, உபர் காலவரையற்ற வேலை நிறுத்தம்..?

1

பிப்ரவரி 1 முதல்  சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது, இந்த சேவைகளை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படலாம், என்ற போதும், தங்களது இந்த வேலை நிறுத்தத்திற்கான நியாயங்களை காரணங்களாக எடுத்துக் கூறியுள்ளனர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள்.

ஓலா மற்றும் உபர் நிறுவனங்களின், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான உயர் கமிஷன்கள் தங்கள் வருவாயைக் கணிசமாகக் குறைத்ததே இந்த போராட்டத்திற்கு முதல் காரணம், என அவர்கள் கூறுகின்றனர். அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், கட்டண திருத்தத்திற்கான நீண்டகால கோரிக்கை 12 ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளதாகவும், மாநில அரசு அதன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் அவர்களது குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

ஓலா மற்றும் உபர் என இந்த இரண்டு ஆப்களைத் தாண்டி, சென்னையில் மேலும் சில ரைடு-ஹெய்லிங் ஆப்கள் உள்ளன. ரேபிடோ, நம்ம யாத்ரி மற்றும் டாக்ஸினா போன்ற இந்தத் தளங்களில் இயங்கும்.ஓட்டுநர்கள் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தங்களது சேவையைத் தொடருவார்கள், என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், ரேபிடோவும் வழக்கம் போல் செயல்படுவதன் மூலம் அவர்களின் கேப்டன்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான தனது ஆதரவைத் தொடரும், என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 

Trending News

Latest News

You May Like