1. Home
  2. தமிழ்நாடு

கூகிள் மேப்புக்கு 'குட்பை' சொன்ன ஓலா..!

1

ஓலா கேப்ஸ் (Ola cabs) தனது செயலியில் இது நாள் வரை பயன்படுத்திய கூகிள் மேப்ஸ் தொழில்நுட்பத்தை இனி பயன்படுத்துவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கிய Ola Maps-ஐ முழுமையாக செயல்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை Azure மற்றும் Google Map போன்ற பிற நிறுவனங்களின் பயன்பாடுகளை உபயோகித்து வந்த OLA, தான் உருவாக்கிய Krutrim செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அவைகளில் இருந்து முழுமையாக வெளியேறியதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பவிஷ் அகர்வால் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், Ola Cabs ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வரை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த மாதம் Azure Cloud பயன்பாட்டில் இருந்து வெளியேறிய Ola, இப்போது Google Maps-ல் இருந்தும் முழுமையாக வெளியேறிவிட்டது. மேப்பிங் சேவைக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவழித்த நாங்கள், Ola Maps-க்கு மாறியதால் இந்த மாதம் முதல் செலவினம் குறையும்” என்று பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like