1. Home
  2. தமிழ்நாடு

நாளை நள்ளிரவு முதல் ஓலா உபேர் ஆட்டோக்கள் ஓடாது..!

1

பிப்ரவரி ஒன்1ஆம்   தேதி முதல் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர் என்பதும் அதன்படி இரண்டு கிலோமீட்டருக்கு 50 ரூபாய் அதன் பின்னர் ஒவ்வொரு கிலோமீட்டர் 18 ரூபாய் கட்டணம் நிறுவனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 

இந்த நிலையில் திடீரென ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டுபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறிய போது ’ஓலா, உபேர் நிறுவனங்கள் 25% கமிஷன் தொகையாக கேட்கின்றனர் என்றும் இதனை கண்டித்து இரு நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டுவதை நிறுத்தப் போகிறோம் என்றும் பிப்ரவரி 1 முதல் இந்த இரு நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினரை அழைத்து ஓலா, உபேர் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது

Trending News

Latest News

You May Like