1. Home
  2. தமிழ்நாடு

அட கொடுமையே..! ஓடும் ஆம்புலன்சில் இருந்து கீழே விழுந்த நோயாளி..!

1

குன்னூர் அருகே நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தை அடுத்து வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது.

அப்போது திடீரென ஆம்புலன்சில் பின்பக்க கதவு திறந்தது. மேலும் ஸ்ட்ரெச்சருடன் நோயாளி சாலையில் விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கூச்சலிட்டு ஆம்புலன்சை நிறுத்தினர். பின்னர் நோயாளியை மீட்டு அதே ஆம்புலன்சில் மீண்டும் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Trending News

Latest News

You May Like