1. Home
  2. தமிழ்நாடு

அடேங்கப்பா.! இப்படி கூட மோசடி செய்யலாமா ? இளமையை மீட்டுத் தருவதாக கூறி ரூ.35 கோடி மோசடி..!

1

உ.பி கான்பூரில் உள்ள கிட்வாய் நகர் பகுதியில் தெரபி சென்டர் நடத்தி வரும் ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி தூபே வயதான மற்றும் நடுத்தர வயத்துடயவர்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்

60 வயது முதியவரையும் 25 வயது இளைஞராக மாற்றும் அதிநவீன டைம் மெஷினை தாங்கள் இஸ்ரேலிலிருந்து வாங்கி வந்துள்ளோம் என்று விளம்பரப்படுத்தி பலரை இவர்கள் தங்கள் தெரபி சென்டருக்கு ஈர்த்துள்ளனர். அந்த டைம் மெஷின் மூலம் ஆக்சிஜன் தெரபி செய்து இளமையை மீட்டுத்தருகிறோம் என்று கூறி ரூ.90,000 கட்டணமாக வசூலித்துள்ளனர்.

1

இவர்களிடன் ரூ. 10.75 லட்சம் ஏமாந்த பெண்மணி ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை சுமார் ரூ.35 கோடிவரை அவர்கள் மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் வருவதை அறிந்து கம்பி நீட்டிய தம்பதியை உ.பி காவல்துறை வலைவீசித் தேடி வருகிறது.

Trending News

Latest News

You May Like