1. Home
  2. தமிழ்நாடு

செம செம..! இன்றைய பட்ஜெட்டில் கோவை மக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்புகள்..!

1

ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறு மாத கால பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும்.


கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாநகராட்சிகளிலில் ஆயிரம் முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை, கோவை, மதுரை. திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும் 

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்

Trending News

Latest News

You May Like