1. Home
  2. தமிழ்நாடு

அடேங்கப்பா..! நீதா அம்பானி வாங்கிய காரின் விலை ரூ.100 கோடியாம்... உலகத்திலேயே 11 கார் தான் இருக்குதாம்.!!

1

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நிதா அம்பானி. அம்பானி குடும்பத்தின் உலகத் தரம் வாய்ந்த கேரேஜில் மற்றொரு ரதத்தினத்தைச் சேர்த்துள்ளார் .நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்ததாக கருதப்படும் காரை வாங்கியுள்ளார். அம்பானி குடும்பத்தின் உலகத் தரம் வாய்ந்த கார் சேகரிப்பில், சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள மிகவும் அரிதான ஆடி A9 கமிலியன் (Audi A9 Chameleon) காரும் தற்போது இணைந்துள்ளது.


ஆடி A9 கமிலியன் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகச் சில பிரத்யேக சொகுசு கார்களில் ஒன்றாகும். இதன் மிக முக்கியமான சிறப்பு அம்சம் என்னவென்றால், அதன் பச்சோந்தி போன்று நிறம் மாற்றும் வண்ணப்பூச்சு தான். வெளிச்சம் மற்றும் கோணங்களைப் பொறுத்து நிறத்தை மாற்றும். இது காருக்கு உலகளவில் அதிக ஈர்ப்பை அளிக்கிறது. இதன் வடிவமைப்பு எதிர்காலத்தைக் குறிப்பதாகவும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கைவினை வேலைப்பாடுகள், கலைத்திறனுடன் கூடிய இதன் வேலைப்பாடுகள் ஒரு அரிய கலவையாகும். காரின் உட்புறமும், வாடிக்கையாளரின் விருப்பப்படி வடிவமைக்கப்பட்டுள்ள டிசைன்கள், அடுத்த தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் மற்றும் கைவினை விவரங்கள் எனச் சமமான ஆடம்பரத்துடன் உள்ளது.


இது காருக்கு உலகளவில் அதிக ஈர்ப்பை அளிக்கிறது. இதன் வடிவமைப்பு எதிர்காலத்தைக் குறிப்பதாகவும், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கைவினை வேலைப்பாடுகள், கலைத்திறனுடன் கூடிய இதன் வேலைப்பாடுகள் ஒரு அரிய கலவையாகும். காரின் உட்புறமும், வாடிக்கையாளரின் விருப்பப்படி வடிவமைக்கப்பட்டுள்ள டிசைன்கள், அடுத்த தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் மற்றும் கைவினை விவரங்கள் எனச் சமமான ஆடம்பரத்துடன் உள்ளது.

உலகளவில் வெறும் 11 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள இந்த அரிதான காரின் உரிமையாளராக நீதா அம்பானி மாறியுள்ளார். இதன் மூலம், இந்த ஆடம்பரமான தலைசிறந்த படைப்பைச் சொந்தமாக்கிய 11 பேர் கொண்ட உலகளாவிய உயரடுக்கு பட்டியலில் அவர் இணைந்துள்ளார். அம்பானி குடும்பம் ஏற்கெனவே உலகின் மிக அரிதான மற்றும் மிகவும் விலையுயர்ந்த கார்களைத் தனது சேகரிப்பில் வைத்திருப்பதற்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆடி A9 Chameleon, ஆடம்பர கார் சேகரிப்பில் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீதா அம்பானியின் இந்த கார், இந்தியாவின் சாலைகளில் ஓடும் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிதான காராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like