அடேங்கப்பா..! அமரன் ஒரு நாள் வசூல் இத்தனை கோடிகளா..?
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ’அமரன்’ படம் உருவாகியது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.31) திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் திரை வாழ்வில் இதுதான் அவரது முதல் நாள் அதிகபட்ச ஓபனிங் என்பது கவனிக்கத்தக்கது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் படத்தின் வசூல் கூடும் என கூறப்படுகிறது.
Bringing True Heroism to the Big Screen, #Amaran Sees Massive Collections Across the Globe! #StrongerTogether#Amaran #MajorMukundVaradarajan#KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) November 1, 2024
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/dTtrqJlQa9