அடேங்கப்பா..! 50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளமா..?
ரஜினிகாந்த், ஷாருக்கான், ஜெயராம், நாகார்ஜூனா அக்கினேனி உள்ளிட்டோருடன் பணிபுரிந்த இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் சினிமா இண்டஸ்ட்ரியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
2018ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின்(Forbes India) ‘பிரபலங்கள் 100’ பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய முன்னணி பெண் நடிகை இவர்தான். இந்த நடிகை 20 ஆண்டுகளில் 80 திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், பல விருதுகளையும் வென்றுள்ளார்.
தொடக்கத்தில், நடிகையாக வேண்டும் என்ற ஆசை இல்லாத அவர், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர் CA-ஆக வேண்டும் என நினைத்த நிலையில், இறுதியில் சினிமாவில் நுழைந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இந்த நடிகையின் வளர்ச்சி ஒருகட்டத்தில் சரிந்ததாக அனைவரும் நினைத்தபோது, அவர் வலுவாக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அனைத்து படத்தயாரிப்பாளர்களும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தனர்.அவர்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 2015ல் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் பணிபுரியும்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு, வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர்.2023ஆம் ஆண்டு, நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்ததன் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த நடிகை டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த விளம்பரத்தில் நடிக்க, அவர் 50 வினாடிகளுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது அவரது ஒரு படத்திற்கான கட்டணம் என்று சொல்லப்படுகிறது.படத்திற்கு கூட இந்த கட்டணம் இல்லை. மாக்ஸிமும் 10 கோடி தான் கொடுக்கிறார்கள்.
50 வினாடி விளம்பரத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்று, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையைப் நடிகை நயன்தாரா பெற்றுள்ளார்.