அடேங்கப்பா..! சாக்லேட் விலை ஒரு கோடி ரூபாயாம்!
பென்சில்வேனியா – மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் உள்ள SARRIS CHOCOLATE தொழிற்சாலை மிகப் பிரபலம்.இதில் சாக்லேட்டுடன் விதவித ஐஸ்கிரீம்களும் உண்டு. உலகில் நாம் பார்க்கிற – உபயோகிக்கிற சோப்பு – சீப்பு- (செருப்பு) முதற்கொண்டு பல்வேறு உருவங்களில் சாக்லேட்டுகள் தயாரித்து காட்சிப்படுத்துகிறார்கள்.
அத்துடன் அவர்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க – ஜிம்கானா ஏதாவது செய்வதுண்டு. தற்போது 1,180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம்,3 அடி அகலம் கொண்ட சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்தில் 8 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது.
இதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள் ! (ஒரு கோடிக்கும் மேல் ! )
இதையும் பெருமையுடன் வாங்கிச் செல்லப் போட்டாப் போட்டியாம்! அம்மாடி ! அங்கு உள்ள சாக்லேட் தொழிற்சாலைகளைப் பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கிறார்கள். பார்க்கலாம். ரசிக்கலாம். ருசிக்கலாம். வாங்கலாம்.