சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை தமிழ்நாடு முழுவதும் பிரபல ஹோட்டலாக திகழ்கிறது. இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு செயல்பட்டுவரும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையிலும் சோதனை நடைபெற்றது. அதில், அவர்கள் உணவு பாதுகாப்பு தரச்சான்றினை புதுப்பிக்காமல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் உணவகத்தை பூட்டி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மதுரவாயல் கடையில் கடந்த ஓராண்டாக சான்றினை புதுப்பிக்கவில்லை என தெரிகிறது.