1. Home
  2. தமிழ்நாடு

வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..! கோட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

1

வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியாேர் நடித்திருக்கின்றனர். இந்த படம் மூலமாக, நடிகர் விஜய் பல நாட்களுக்கு பிறகு நெகடிவ் ஷேட் பொருந்திய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைக் மோகன் இதில் வில்லனாக வருகிறார். 

இந்நிலையில்  கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. தி கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றிருக்கிறது. சாட்லைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றிருக்கிறது

கோட் திரைப்படம் ஒரு மாதமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 (நாளை மறுநாள்) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


 

Trending News

Latest News

You May Like