1. Home
  2. தமிழ்நாடு

வீட்டை காலி செய்ய சொன்ன அதிகாரிகள் : சுற்றி வளைத்து சிறைபிடித்த பொதுமக்கள்

வீட்டை காலி செய்ய சொன்ன அதிகாரிகள் : சுற்றி வளைத்து சிறைபிடித்த பொதுமக்கள்


சென்னை சாந்தோம் பகுதியில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ,மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலையில். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான குயில் தோட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த 1970-ம் ஆண்டு குடிசையாக இருந்த அந்த பகுதியை அகற்றி, ஏழை எளிய மக்களுக்கு 348 வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுத்தது.

இந்த வீடுகள் கட்டி 45 ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதனை அகற்றி புதிய வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், இன்று காலை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து, மழைக்காலம் தொடங்குவதற்குள் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட முயன்றனர்.

இதனால், ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள், கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமலும், சாப்பாடு இல்லாமலும் தவித்து வருகின்றோம். இப்போது இந்த வீடும் இல்லைனா எங்க போய் தங்குவது என கொந்தளித்தனர்.

மேலும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்து அதிகாரிகள் வேகமாக நடையை கட்டினர்.

newstm.in

Trending News

Latest News

You May Like