1. Home
  2. தமிழ்நாடு

ஆ.ராசா காரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பெண்ட்..!

Q

நீலகிரி தேர்தல் பறக்கும் படை அதிகாரியான குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் கீதா என்பவர் நீலகிரியில் திமுக எம்.பி.ஆ.ராசா சென்ற காரை மறித்தார். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை சோதனை செய்வதற்காக நிறுத்த சொன்னதை உணர்ந்த எம்.பி.ராசா காரை விட்டு கீழே இறங்கினார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் இருந்தார்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காரின் டிக்கியை திறக்க சொன்னதும், கார் ஓட்டுநர் திறந்தார். அப்போது, 5-க்கும் மேற்பட்ட பெட்டிகள் அடுக்கி இருந்தது. அதில் ஒரே ஒரு சிறிய பெட்டியை மட்டும் திறந்து காண்பித்தார் ஓட்டுநர். மற்ற பெட்டிகளை திறக்க பறக்கும் படை அதிகாரி சொல்வதற்கு முன்பு, ”மற்ற பெட்டிகளில் வெறும் ஆடைகள் தான் உள்ளது”, என ஆ.ராசா தெரிவித்தார்
காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துக்கொண்டிருந்த போது, அமைச்சர் ராமச்சந்திரன் அங்கிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை அழைத்து சோதனை செய்தது போல் கணக்கு காண்பிக்குமாறு செய்கை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், ஆ.ராசவுடன் வந்த அனைத்து காரையும் சோதனை செய்யாமல் அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, சாதாரண பொதுமக்களுக்கு ஒரு நீதி என்பதை போல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டால், தேர்தல் நேரத்தில் பணப் புழக்கத்தை எப்படி தடுக்க முடியும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும், மளிகை பொருட்கள் வாங்க செல்பவர்களையும், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப செல்பவர்களை பறந்து பறந்து பிடிக்கும் பறக்கும் படையினர், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் வாகனங்களை சோதனை செய்யாமல், அவர்களுக்கு பாதம் தாங்கிகளாக இருந்தால் தேர்தல் நேரத்தில் பணப் புழக்கத்தை எப்படி கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுகிறது.
மேலும், சுற்றுலா வரும் அப்பாவி பயணிகளிடம் பறக்கும் படையினர் ரூல்ஸ் பேசி போலியான நேர்மையை வெளிபடுத்தி, அதிகார திமிரை காட்டுவதால் அந்த உன்னதமான பணியை செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
இந்நிலையில் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பறக்கும்படை அலுவலர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Trending News

Latest News

You May Like