மெட்ரோ ரயில் பயணத்திற்கு சலுகை.. பயணக் கட்டணம் மீது 50 % ஆஃபர் !

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனொருகட்டமாக கடந்த 7ஆம் தேதி முதல் சென்னையில் மெட்ரே ரயில் சேவை தொடங்கியது.
முதல் கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து முதல் 9 மணி வரையில் அனைத்து வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
எனினும் கொரோனா அச்சுறுத்தல், ஐடி நிறுவனங்கள் இன்னமும் திறக்காதது போன்ற காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வரத்து இல்லை.
இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் மெட்ரே ரயில் பயணத்திற்கு 50 சதவிகித கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 20 சதவிகித கட்டண சலுகையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in