மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சலுகை.. டிக்கெட்டுக்கு 20% கட்டணச் சலுகை !

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சினிமா துறை, போக்குவரத்து சேவைகள் முடங்கின.
அதன்படி சென்னையில் 5 மாதக்காலமாக மெட்ரோ ரயில் சேவையும் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அரசு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.
அதன்படி, பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பயணச்சீட்டு பெற டிக்கெட் கவுன்ட்டர்கள் முன் பயணிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில், பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் CMRL எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் QR தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மின்னணு முறையில் டிக்கெட் பெறும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பயணக் கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயண டிக்கெட், ரிட்டன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து வித பயண டிக்கெட்களை QR தொழில்நுட்பத்தில் பெறும் அனைத்து பயணிகளுக்கும் இந்த கட்டண சலுகை பொருந்தும்.
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
newstm.in