1. Home
  2. தமிழ்நாடு

ஒடிசா காங்கிரஸ் கலைப்பு: கார்கே உத்தரவு..!

1

ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒடிசாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று ஒடிசா காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவர் பக்த சரண்தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்து இன்று உத்தரவிட்டார்.மேலும், புதிய தலைவர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய தலைவர்கள் செயல் தலைவர்களாக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like