1. Home
  2. தமிழ்நாடு

அக்டோபர் மாத ராசிபலன்கள் 2025 : இந்த மாதம் சில ராசிகளின் தலைவிதி மாறும்..!

1

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலம் செய்து முடிக்க முடியும். கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் குறையும். அரசியல்வாதிகளுக்கு மனகவலை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

அஸ்வினி:

இந்த மாதம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். 

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். 

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 06, 07
**********************************************************************************************************************************************************************
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் தாமதமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். ஆனாலும் எடுத்த காரியங்களில் இழுபறி நீடிக்கும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். பெண்களுக்கு பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. 

ரோகிணி:

இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். 

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் அனைத்து விதமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 01, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 08, 09
********************************************************************************************************************************************************************
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  ராசியில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார். 

பலன்:

இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். வீண் அலைச்சல் குறையும். போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம். கலைத்துறையினர் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்களுடைய புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

திருவாதிரை:
இந்த மாதம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 02, 03, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 10, 11, 12
********************************************************************************************************************************************************************
கடகம் (புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக ராசிக்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய மாற்றம் கிடைக்கும். வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். குடும்பத்தில் தமபதிகளிடையே கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பொருளாதார பிரச்சனைகள் அகலும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். 

பூசம்:
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

ஆயில்யம்:
இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 04, 05, 31
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 13, 14
********************************************************************************************************************************************************************
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சுக்கிரன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் காரிய தடை நீங்கும். தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் சக ஊழியர்கள் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

மகம்:
இந்த மாதம் வீட்டிற்கு தேவையான வசதிகள்  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில்   தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. 

பூரம்:
இந்த மாதம் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.  

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்வதுடன் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 06, 07
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 15, 16
*******************************************************************************************************************************************************************
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில் சூரியன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   ராசிக்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சூரியன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். வியாபாரம், தொழிலில் தேவையற்ற செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய பொறுப்புகளை ஏற்கும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிடுவது நன்மை தரும். பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மனதிற்க்கு இனிய சந்தோஷமான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. 

அஸ்தம்:
இந்த மாதம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. 

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர மனதில் இருந்த கலக்கம் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். 
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 08, 09
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 17, 18
********************************************************************************************************************************************************************
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   ராசிக்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  ராசியில்  இருந்து  செவ்வாய், புதன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை சிரத்தையுடன் செய்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தை விட்டு தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பெண்களுக்கு எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை.  மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது. 

சுவாதி:
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும்

செலவாகும். 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

பரிகாரம்: தினமும் அம்மனை வணங்கி சுமங்கலி பூஜை செய்து வர குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 19, 20, 21
********************************************************************************************************************************************************************
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - லாப ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ராசிக்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் காரியவெற்றி உண்டாகும். சுப விரையங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள்  வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

கேட்டை:
இந்த மாதம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 22, 23
********************************************************************************************************************************************************************
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு  லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். பெண்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினர் எதையும் சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

மூலம்: 
இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  

பூராடம்:
இந்த மாதம் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு  சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் முன்னோர்களையும், குலதெய்வத்தையும் வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 24, 25, 26
********************************************************************************************************************************************************************
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். அரசியல்வாதிகளுக்கு கடின உழைப்பு வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.  

திருவோணம்:
இந்த மாதம் மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழுகவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.  

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள்.  மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும்.  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

பரிகாரம்:  தினமும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்:     அக்டோ 01, 27, 28
********************************************************************************************************************************************************************
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் சனி (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்து வந்த தாமதபோக்கு நீங்கும். தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கலைத்துறையினர் உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

பரிகாரம்: தினமும் வினாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்:     அக்டோ 02, 03, 29, 30
********************************************************************************************************************************************************************
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் அனைத்து விஷயங்களும் லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். கலைத்துறையினர் வாக்கு வன்மையால் எல்லாம் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். 

உத்திரட்டாதி:
இந்த மாதம் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.  தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக் கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: தினமும் சிவனுக்கு பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 04, 05, 31


 

Trending News

Latest News

You May Like