அக். 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு மட்டுமல்லாமல், கட்டிட அமைப்பை ரசிக்கவும், உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றனர் . அதனால் வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப். 8ம் தேதி மாதாவின் நாள் என்பதால் அன்று திருவிழா நடைபெறும்.
இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 29 தேதி முதல் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தினம் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.