தாறுமாறாக பைக் ஓட்டி மரத்தில் மோதல்; ஸ்பாட்டிலேயே 3 சிறுவர்கள் பலி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வழயிலா அருகே உள்ள அருவிக்கரா சாலையில் 16 வயதை உடைய மூன்று சிறுவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றிருக்கிறார்கள்.
அந்த பைக்கில் சென்று மூவரில் ஒருவர் கூட ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. தாறுமாறாக பைக்கை ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. இதனால் அருவிக்கரா சாலையோரத்தில் இருந்த மரக்கூட்டத்திற்குள் சிறுவர்கள் வந்த பைக் புகுந்திருக்கிறது.
விபத்தை நேரில் கண்ட அவ்வழியேச் சென்ற மக்கள் காப்பாற்ற சென்றும் பலனளிக்கவில்லை. ஏனெனில் விபத்தில் சிக்கிய சிறுவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட உயிரிழந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
அதில், அதிவேகமாக பைக் ஓட்டியதால் விபத்து நிகழ்ந்ததை உறுதிபடுத்திய போலீசார், உயிரிழந்த சிறுவர்கள் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றும் அவர்கள் பினீஷ், ஸ்டீஃபன், முல்லப்பன் என தெரிய வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Three 16-year-old boys were killed in a bike accident at Vazhayila. Mannamoola-natives Bineesh, Stephin and Siddharth died when the bike lost control on Tuesday evening pic.twitter.com/IX5HZi8bla
— TrivandrumLife (@TrivandrumL) January 4, 2022