இன்று பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் : ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு , ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், எளிய பின்னணியில் இருந்து தலைமைத்துவத்தின் உயர்ந்த நிலைக்கான உங்களின் பயணம் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 16, 2023
— O Panneerselvam (@OfficeOfOPS) September 16, 2023