1. Home
  2. தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

1

”ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்” அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்  என ஓபிஎஸ் அணியுடன் பயணம் செய்த கே.சி. பழனிசாமி , புகழேந்தி மற்றும் ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது. அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் ஓபிஎஸ் அணியும் தோல்வியை தழுவியிருக்கிறது. 

இந்நிலையில் , ஓபிஎஸ் அணியுடன் பயணம் செய்த கே.சி. பழனிசாமி , புகழேந்தி மற்றும் ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இவர்கள் பேசியதாவது, ”ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்” , இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தற்போது, அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த பிரச்னை இல்லை எனவும் புகழேந்தி  தெரிவித்தார். 

மேலும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகுவதாக ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி, புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை தொடங்கியுள்ளார். அதிமுகவை யாரோ அழிக்கப்பார்கிறார்கள் என புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக VS பாஜக என இருந்ததை திமுக VS பாஜக என கொண்டு வந்துவிட்டார்கள். இதனை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை என புகழேந்தி கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like