7ம் நம்பர் எண் தோனிக்கு மட்டுமே...வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது : ஜான்வி கபூர்..!
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31 ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தில் மஹிமா என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரின் படத்தின் ப்ரோமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் ‘6’ என்ற எண் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அதுபற்றி ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார். ‘6’ என்ற என்ற எண் கொண்ட உடையை அணிவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், ‘7’ என்பது கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சிக்கு நம்பர் ஆகும். அது அவருடைய எண் மட்டுமே ஆகும். வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது. எனவே மஹிமா கதாப்பாத்திரத்தின் ஜெர்சிக்கு அதுபோல மற்றோரு என்னை தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் எனது லக்கி நம்பரான ‘6’ என்ற என்னை பயன்படுத்திக்கொண்டோம், இந்த எண் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி படம் பற்றி பேசிய அவர், இது காதல், கிரிக்கெட் மற்றும் குடும்ப படமாக எமோஷனலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.