இனி ட்விட்டர்க்கு போக X.COM டைப் செய்தால் போதும்..!
2006-ல் ஆரம்பிக்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பதவி விலகினார்.
இதனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார். அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரங்களுக்கு இடையில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
அதன்படி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்தார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் உடனடியாக இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை எக்ஸ் என்று மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். தற்போது X.COM என்ற தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Our headquarters tonight pic.twitter.com/GO6yY8R7fO
— Elon Musk (@elonmusk) July 24, 2023
இதை கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். இன்று ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவை நீக்கப்படும். அதற்கு பதிலாக எக்ஸ் கொண்டு வரப்படும். இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ட்விட்டர் தளம் மாற்றப்பட்டு எக்ஸ் தளமாக மாறும். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
ட்விட்டர் வருங்கால சிஇஓ யாக்கரினா இது தொடர்பாக செய்த ஸ்டில், எக்ஸ் நிறுவனம்தான் இனி எதிர்காலம். வீடியோ, ஆடியோ, மெசேஜிங், பேமெண்ட், பேங்கிங் எல்லாம் சேர்ந்து ஒரே இடத்தில இருக்கும் விதமாக ஒரு பிராண்டாக இது இருக்கும். எல்லா சேவைகளை அளிக்கும் இடமாக இது இருக்கும். ஏஐ மூலம் இது செயல்படும். எக்ஸ் நம்மை எல்லாம் இணைக்க போகிறது என்று தெரிவித்துள்ளார்.