இனி திருப்பதியில் இதற்கு 10 ரூபாய் செலுத்த தேவையில்லை..!
ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மலையில் உள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். இதனால் இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை.
கோவில் வளாகத்தில் திருநாமம் இட பக்தர்களிடம் ரூ.10 முதல் 20 வரை வசூல் செய்கிறார்கள். ஒரு சில பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்குகிறார்கள். இதனை தவிர்க்க ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்