1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்த சீரியலை 1 மணிநேரம் பார்க்கலாம்..!

1

சிறகடிக்க ஆசை சீரியல் அநேகமான ரசிகர்களின் மனங்களை வென்ற சீரியலாக இருக்கிறது. இந்நிலையில் பரபரப்பான கட்டித்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் ரசிகர்களுக்கு சீரியல் குழுவினர் ஒரு குட் நியூஸ் வெளியிட்டு உள்ளார்கள். 

விஜய் டிவி சீரியலில் டிஆர்பி டாப்பில் இருக்கும் இந்த தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் முத்து-மீனா, ரோஹினி மீது முழுமையான சந்தேகத்துடன் உள்ளனர், அவர் ஏதோ தவறுகள் செய்கிறார் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.அதனை கண்டுபிடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். 

ஒரு பக்கம் ரோகிணியின் ஒவ்வொரு ரகசியங்களும் அம்பலமாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் வழமையாக 9:00 மணி தொடக்கம் 9:30 மணிவரை ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இனி ஜனவரி 20ம் தேதி முதல் இரவு 9 முதல் 10 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.  தங்களுக்கு பிடித்த சீரியலை இனி 1 மணிநேரம் பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருப்பார்கள்.

Trending News

Latest News

You May Like