1. Home
  2. தமிழ்நாடு

இனி வெறும் ரூ.160க்கு சென்னை டூ பெங்களூரு பயணம் செய்யலாம்... அதுவும் டபுள் டெக்கர் ரயிலில்..!

1

நாடு முழுவதும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே டபுள் டெக்கர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகை ரயில்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும். இந்த டபுள் டெக்கர் ரயிலானது வெளிநாடுகளில் உள்ள ரயில் சேவைகளை போல நவீன முறையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஏசி சேர் கார் பிரிவு ரயில் பயணிகள் மத்தியில் கடந்த சில நாட்களாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் பல மடங்கு குறைவான டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதற்கேற்ப பயண நேரமும் அதிகம் என்று வைத்து கொள்ளலாம். உதாரணமாக சென்னை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் காரில் 995 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 4 மணி 20 நிமிடங்கள். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி சேர் காரில் 980 ரூபாய்.

அதுவே இரண்டாம் வகுப்பு சிட்டிங்கில் 160 ரூபாயும், சேர் காரில் 560 ரூபாயும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 5 மணி 45 நிமிடங்கள்.

இந்நிலையில் 10 ஏசி டபுள் டெக்கர் ஏசி பெட்டிகள் இருந்தன. தற்போது 8 ஏசி டபுள் டெக்கர் ஏசி பெட்டிகளும், 5 ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளும், ஒரு பொது வகுப்பு பெட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இது சாமானிய ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Trending News

Latest News

You May Like