1. Home
  2. தமிழ்நாடு

இனி கரண்ட் பில் வாட்ஸ்-அப் மூலம் கட்டலாம்... ஆனால் ஒரு கண்டிஷன்!

1

மின் நுகர்வோர்களுக்கு தேவையான வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றனர் தமிழ்நாடு மின்சார வாரியம்.

அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலில் இருக்கிறது.

இல்லையெனில் மின் வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணத்தை செலுத்தலாம். இதனுடன் கூடுதல் வசதியாக வாட்ஸ்-அப் கட்டண நடைமுறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வாட்ஸ்-அப் யுபிஐ மூலம் எளிதாக மின் கட்டணத்தை செலுத்த முடியும். மேலும் தவறான எண்ணிற்கு கட்டணத்தை செலுத்தி ஏமாறாமல் இருக்கும் வகையில், Tangedco-வின் லோகோ, அதிகாரப்பூர்வ எண் ஆகியவற்றை சரிபார்த்து கொள்வது அவசியம்.


இதில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தி அதற்குரிய கட்டணத்தை செலுத்துவோர் மட்டுமே வாட்ஸ்-அப் மின் கட்டண வசதியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 500 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரம் செலுத்துவோர் தான் அதிக அளவில் இருக்கின்றனர். எனவே வாட்ஸ்-அப் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அனைத்து நுகர்வோர்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like